துபாயில் நடைபெறவுள்ள அகமும்..புறமும்..சிறப்பு பயிற்சி முகாம்


மார்ச் 20ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் முஹைஸ்னா பகுதியில் உள்ள பட்ஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கும் முறைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை அறிதல், வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறைகள் ஆகியவைக் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கிறது

ஏற்கனவே ஷார்ஜா, துபாய், சென்னை போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மனநல ஆலோசகர் ஹூஸைன் பாஷா அவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை நிர்வாகிகளும், அல் அமான் இண்டர்நேஷனல் நிறுவனத்தினரும் இணைந்து செய்துவருகின்றனர்

முன்பதிவு செய்பவர்கள் 050-2933713, 050-9595216 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment